தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் வெறும் கண்துடைப்பு நாடகமாக இருந்து விடக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார். இது பற்றி அவர்,ஆன்லைன் சூதாட்டத்தில் ஐந்தாயிரம் கோடிக்கும் மேல் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டு கொள்ளை லாபம் அடிக்கும் நிறுவனங்கள், சட்டம் நிறைவேற்றி விட்டார்கள் என கடந்து செல்ல மாட்டார்கள்.கடந்த முறை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தை நீதிமன்றத்தில் கோட்டை விட்டது போல இப்போதும் இருந்து விடக்கூடாது,என அவர் கூறியுள்ளார்.