Categories
மாநில செய்திகள்

“தனியாரை விட குறைந்த சம்பளம் கொடுக்கும் அரசு”…. கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.5,000 என்பதை உயர்த்த ‌வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளது. இது‌குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளி கல்வித்துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் மேற்படி சிறப்பு ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் ரூ.5000 என்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு போதுமான கல்வி தகுதி இல்லையன்றால் தொடக்க கல்வியில் பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர்களின்‌ பணிக்காலம் 11 மாதங்கள் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து  குறைந்த கூலி சட்டத்தின் படி ரூ.300க்கும் மேல் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆனால் ஒரு ஆசிரியருக்கு மாதம் ஊதியம் ரூ.5000 என்றால் ஒரு நாள் சம்பளம் வெறும் ரூ.166 மட்டுமே. இது தனியார் பள்ளிகள் வழங்கும் ஊதியத்தை விட குறைவு என்று விமர்சித்துள்ளார். இதனையடுத்து தகுதியான ஆசிரியர்களை நியாயமான ஊதியத்தில் அமர்த்த வேண்டியது அரசின் கடமை. இதில் ஆசிரியர்களின் நலன் மட்டுமில்லாமல் குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கி உள்ளது என்பதை அரசு உணர்ந்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தால் அது அனைவருக்கும் நல்ல பயனாக அமையும். இது குறித்து பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. எனவே முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு ‌எல்கேஜி மற்றும் யுகேஜி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை குறைந்தபட்ச ரூ.10,000 ஆக உயர்த்தவும், 11 மாதம் என்ற கால அளவை ரத்து செய்ய வேண்டும். மேலும் மேற்படி வகுப்புகளுக்கு நிரந்தரமான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுகம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |