மோகன்லால் நடிப்பில் தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் “ராம்” திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகின்றார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும், திரிஷாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நயன்தாராவுடன், த்ரிஷாவும் நடிப்பதாக உள்ளது. ஆனால் கடைசி சமயத்தில் திரிஷாவுக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க தமிழ், மலையாளம் மொழிகளில் தயாராகும் “ராம்” திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகின்றார்.
இந்தப் படப்பிடிப்பு லண்டனில் நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நயன்தாராவையும் நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மலையாள பட உலகில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த “ராம்” திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் திரிஷாவுடன், நயன்தாரா நடிக்கும் காட்சிகள் இடம் பெறும் என்றும் இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகளில் நயன்தாரா வருவது போன்று திரைக்கதை அமைந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.