நடிகை சதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்தவர் சதா. தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை சதா வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியதாவது, “வாழ்க்கையில் அனைவரும் இருக்க வேண்டிய ஒரே இலட்சியம் எப்போதும் சந்தோஷமாக இருப்பது மட்டும் தான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சந்தோசமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். நமது மகிழ்ச்சியை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களையும் மனிதர்களையும் கண்டுபிடிங்கள். ஆனந்தமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி என்று நமக்கு தான் தெரியும். அதற்காக எங்கெங்கோ சென்று தேட வேண்டாம். நம்மை அதிருப்திக்கு ஆளாக்கும் மனிதர்கள் அடிக்கு ஒருவர் இருப்பார்கள். வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்தும் நிலைமைகள் கூட ஏற்படலாம். ஆனால் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு இருக்காமல் நமக்கு ஆனந்தத்தை கொடுக்கும் மற்ற விஷயங்கள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். நம்மை நாம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது என்பது சுயநலம் அல்ல. மன அமைதி இருக்க வேண்டும் என்றால் உங்களை சுற்றி இருக்கும் சுயநலகாரர்களை விட்டு தூரமாக விலகி இருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.