கேரள மாநிலம் அட்டப்பாடி மலை கிராமம் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மா. இவர் கிராமிய பாடல்களை பாடுவதில் மிகச் சிறந்தவராக விளங்குகிறார். இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்த கலை உலகினர் இவருக்கு ஐயப்பனும் கோஷியும் எனும் படத்தில் பாடல் பாட வாய்ப்பளித்துள்ளனர். அந்த படத்தில் இவர் பாடிய கலக்காத சந்தன நேரம் வெகுவோக பூதிரிக்கும் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நஞ்சம்மா டெல்லியில் விருது வாங்கிய கையோடு லண்டனில் உள்ள லிவர்பூலில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க விமானத்தில் சென்றுள்ளார். லிவர் போல் நகரில் தங்கியுள்ள அவர் அங்குள்ள தெருக்களில் உற்சாகமாக வலம் வரும் காட்சிகளை அவருடன் சென்றவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். அதன்பின் அந்த காட்சிகளை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. நஞ்சம்மா லண்டன் வீதிகளில் நடை போடும் காட்சிகளை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றார்கள்.