மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டெல்லியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த மாணவி வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எதிர்ப்பாராத விதமாக இரண்டு சீனியர் மாணவர்கள் மீது மோதி உள்ளார். ஆனால் அந்த மாணவி அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபமடைந்த அந்த இரண்டு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கி பள்ளிக்கூட கழிவறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக கூறி இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது . இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் அரங்கேறி உள்ளது .இதனை அடுத்து சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தற்போத வெளிச்சம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.