மகாலட்சுமியின் பெயரை டேமேஜ் செய்த சீரியல் நடிகர் தற்பொழுது தன் வீட்டு பிரச்சினைக்கு காரணம் என நடிகர் அர்னவ் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது அர்னவ் செல்லம்மா தொடரில் நடித்து வரும் ஹீரோயினுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக திவ்யா குற்றம் சாட்டி இருக்கின்றார்.
திவ்யா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற போது இருவரும் நெருக்கமாக ஒரே ரூமில் இருந்ததாகவும் தன் கண் முன்னே அந்த நடிகை தன் கணவருக்கு முத்தம் கொடுத்து ஐ லவ் யூ என சொன்னதாகவும் கூறியிருக்கின்றார். இந்த நிலையில் அர்னவ் தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைக்கு நடிகர் ஈஸ்வர்தான் காரணம் என கூறி இருக்கின்றார். தனது நண்பரான ஈஸ்வர்தான் திவ்யாவை தூண்டிவிட்டு இப்படி எல்லாம் பேச வைக்கின்றார் என குற்றம் சாட்டியிருக்கின்றார்.
ஆரம்பத்தில் தனக்கு நண்பராக இருந்த ஈஸ்வரர் தற்பொழுது தன்னையே மிரட்டுகின்றார் என குற்றம் சாட்டிருக்கின்றார். நடிகர் ஈஸ்வர் ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கினார். சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஈஸ்வர் சீரியல் நடிகை மகாலட்சுமியுடன் நெருக்கமாக இருப்பதாக அவரின் மனைவியான ஜெயஸ்ரீ குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இருவரும் பர்சனலாக சேட் செய்த ஆதாரங்களையும் காட்டினார். இதன்பிறகு மகாலட்சுமி அவருடனான தொடர்பை கைவிட்டுவிட்டு அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகியுள்ளார். இந்த நிலையில் அர்னவ்-திவ்யா பிரச்சனையிலும் ஈஸ்வர் பெயர் தான் அடிபட்டு வருகின்றது.