Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சிவகார்த்திகேயன் பட அப்டேட்… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் என்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருக்கிறது. இதனை பட குழு ப்ரமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறது அக்டோபர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |