Categories
ஆட்டோ மொபைல்

பெட்ரோல் வண்டிக்கு bye bye…. ரூ 80000 மதிப்பில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. விரைவில் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிய வேரியன்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வேரியண்டின் பெயர் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 pro ஸ்கூட்டருக்கு அறிவித்திருந்த ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த புது வேரியண்ட் தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடைய விலை ரூபாய் 80 ஆயிரத்திற்குள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 125சிசி ஸ்கூட்டர்களுக்கு இணையாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ள ஸ்கூட்டரில் இருக்கும் அனைத்து அம்சங்களும் S1 வேரியண்டிலும் வழங்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய வேரியட்ண்டில் ஓலா S1 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் 3 k watt hour பேட்டரியை விட சிறிய பேட்டரி வழங்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓலா S1 வேரியண்ட் டி.வி.எஸ் ஐகியூப் மாடலின் பேஸ் வேரியண்டிற்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. மேலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 pro எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது. இந்த சலுகை அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்த சலுகையை தீபாவளி வரை நீட்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |