மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று விடுமுறை என்பதால் நேற்று தமிழகத்தில் மது விற்பனை அமோகமாக இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.