முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடி , ட்ரம்ப் இருவரும் புறப்பட்டு 22 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக மொடீரா கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர்.
இரு நாட்டு தலைவர்கள் செல்லும் வழிநெடுகிலும் லட்சக்கணக்காக மக்கள் வரவேற்பை ஏற்கின்றனர்.இதையடுத்து மொடீரா அரங்கில் நடைபெறும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மொடீரா கிரிக்கெட் அரங்கத்தை திறந்து மொடீரா அரங்கத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் இருநாட்டு தலைவர்களும் புகழ்பெற்ற சபர்மதி காந்தி ஆசிரமத்திற்குச் சென்று பார்வையிடுகின்றனர். அங்கு 30 நிமிடங்கள் பார்வையிடும் அதிபர் ட்ரம்புக்கு ராட்டையும் , மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகத்தையும் நினைவுப் பரிசாக மோடி வழங்குகின்றார்.
இதையடுத்து அங்கு அவருக்கு குஜராத்தின் பாரம்பரிய உணவு விருந்து வழங்கப்பட இருக்கின்றது. உணவை முடித்துக் கொண்டு அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் பிரதமர் மோடியுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு இரு நாடுகளுக்கும் இடையே வணிக ஒப்பந்தத்தை கையெழுத்தாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.இதைதொடர்ந்து அதிபர் ட்ரம்ப் தனது மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் ஆக்ராவில் உள்ள உலக காதலின் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிடுவதோடு ட்ரம்ப்பின் இன்றைய பயணம் நிறைவு பெறுகின்றது.
நாளைய நிகழ்ச்சி அட்டவணை என்னவென்றால் , அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகின்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. இதனையடுத்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் ட்ரம்ப் அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் ஹைதராபாத் இருக்கும் இல்லத்தில் மோடி, ட்ரம்ப் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதை தொடர்ந்து டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் நடைபெறுகின்றது. அதோடு அங்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகளிலும் ட்ரம்ப் பங்கேறவுள்ளார்.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து மீண்டும் குடியரசுத்தலைவரின் ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்று சிறப்பிக்கும் ட்ரம்ப் தனது இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்படுகின்றார். இதுதான் அமெரிக்கா வெள்ளை மளிகை அதிபர் பயணம் குறித்து வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பாகும்.