மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று பெருமளவு வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மனித வள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் ஆகிய துறைகள் இணைந்து இந்த தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் அனுபவமிக்க வல்லுநர்களை கொண்டு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய பயிற்சி முகாம் இன்று காலை 9.30 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலக தேர்வுகள் (SSC Exams) குறித்த ஒருநாள் அரங்கில் நடைபெறவுள்ளது. நூலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள் TN DIPR என்ற யூடியூப் பக்கத்திலும், அரசு கேபிள் டிவியிலும் இந்த நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories