வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(28) என்ற மகள் இருக்கிறார். இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் பெரியகுளம் தேவதானப்பட்டியில் வசிக்கும் ஜோதிபாஸ் எல்லோருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ரித்வான் என்ற ஐந்து வயதில் மகன் இருக்கிறான்.
இந்நிலையில் வேலைக்கு சொல்லாமல் வீட்டில் இருந்தால் ஜோதிபாஸ் 15 லட்ச ரூபாய் வரதட்சனை கேட்டு பிரியங்காவை அடுத்து துன்புறுத்தியுள்ளார். மேலும் பிரியங்காவை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். எனவே ஜோதிபாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரியங்கா புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் ஜோதிபாஸ், அவரின் தந்தை பெருமாள், தாய் மலர்கொடி, உறவினர் ரவீனா ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.