Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“1 கிலோ நகை மாயம்”…. நிதி நிறுவன மேலாளர் அதிரடி கைது…!!!!!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை கையாடல் செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில் அருள் ஞானகணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்தபோது சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.

இதன்பின் கிளை மேலாளரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். பின் தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்கள். போலீசார் விசாரணையில் அருள் ஞானகணேஷ் நகைகளை கையாடல் செய்து தூத்துக்குடியில் இருக்கும் வேறொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து 80 பவுன் நகைகளை மீட்டார்கள்.

Categories

Tech |