தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் ஒருவர் தான் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்து திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றது. நடிகர் சூர்யா நடிக்கும் இந்தத் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாகயுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கான வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கு பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், வியாபாரம் சுமார் 100 கோடியை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.