Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே ரெடியா…. அக்டோபர் 15 காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு வருகை அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் பட்டியல் மற்றும் தேவையான வினாத்தாள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஒவ்வொரு அறையிலும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

தேர்வு கூட நுழைவு சீட்டு உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் உள்ள தேர்வர்களை மட்டுமே தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும். தொலைபேசியில் புகைப்படம் மாறி இருந்தால் அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தால் அந்த நுழைவுச்சீட்டில் தேர்வர்களின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் முத்திரையுடன் சான்றோப்பம் பெறுவது கட்டாயம் அவசியம்.இந்த தேர்வில் சிறந்த மதிப்பெண் பெரும் ஆயிரத்து 500 மாணவர்களுக்கு மாதம்தோறும் 1200 ரூபாய் உதவி தொகை இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

Categories

Tech |