முடி கொட்டுவதை தடுப்பதற்கான ஒரு சிறந்த மருத்துவ குறிப்பை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
முடி கொட்டுவதை தடுப்பதற்காக பலர் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி கொட்டுபவர்களுக்கு அதை தடுக்க வழிவகை உண்டு. ஆனால் ஜீன் அடிப்படையில் அதாவது தந்தை, தாத்தா இவர்களுக்கு முடி கொட்டி இருப்பின் அவர்கள் ஜீன் வழி வந்த மகனுக்கும் அது தொடரத்தான் செய்யும் அதற்கு மாற்று கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமான காரியம்.
இதில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், எண்ணெய் ஒழுங்காக தேய்க்காமல், முடியை பராமரிக்காமல் இருந்ததன் விளைவாகவும் முடி கொட்டி வருபவர்களுக்கு ஒரு டிப்ஸ் இருக்கிறது. அதன்படி, ஆவாரம் பூ முடி கொட்டுவதை தடுப்பதில் முக்கியபங்கு முன்னோர் காலத்திலிருந்து வகிக்கிறது.
இதற்கான குறிப்பும் நமது முன்னோர்களின் இயற்கை மருத்துவ குறிப்பில் இடம் பெற்றுள்ளது. அதில், ஆவாரம் பூவுடன் தேங்காய்ப்பால், செம்பருத்தி ஆகியவற்றை சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் பூசி குளித்தால் முடி கொட்டுவது நின்று விடும். முடியும் நன்கு வளர்ச்சி அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.