யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்களின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டார்கள்.
நேற்று முன்தினம் அதிகாலை 05.30 மணிக்கு அவர்கள் தங்கி இருந்த செட்டிசாவடி பகுதிக்குச் சென்று சோதனை செய்தார்கள். வீட்டில் துப்பாக்கி தயாரிப்பதற்கான குறிப்புகள், உபகரணங்கள், சமையல் பாத்திரங்கள், கேஸ் அடுப்புகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அதிகாரிகள் கணக்கெடுத்தார்கள். இந்த சோதனையானது பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. தற்போது கணக்கெடுக்கப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் விரைவில் ஒப்படைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.