Categories
அரசியல் மாநில செய்திகள்

பாட்டாளி சொந்தங்களே.. ! இன்று பௌர்ணமி…! இதை செய்ய மறந்துறாதீங்க…. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாதத்திற்கு ஒரு முறை கிளை பேரூர், ஒன்றிய மாவட்ட அளவில் செயற்குழுக்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். எப்பொழுதும் பௌர்ணமி நாளில் கிராம கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும் என்றும், ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன்.

கடந்த அமாவாசை மாதத்தின் முதல் நாளில் பாட்டாளி கட்சியினர் செயல்வீரர் கூட்டங்களை நடத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே போல இன்று பௌர்ணமி நாளில் கிராம கிளை கூட்டங்களை பாட்டாளி சொந்தங்கள் நடத்த வேண்டும். அதில் கிராம அளவில் கட்சியின் வளர்ச்சிக்கான பணிகளை தீர்மானித்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |