பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருவள்ளுவர் அருகே உள்ள ஈக்காடு பகுதியிலும் மனநலம் பாதித்தவர்களுக்கான தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.
இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஈக்காட்டில் நடந்து வரும் தொண்டு நிறுவனத்தின் மூலம் 6,296 மனநலம் பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வருகிற 2027-ம் ஆண்டுக்குள் 40,000 பேரை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் 7 நபர்களில் ஒருவருக்கு மனநல பிரச்சனை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர் மனநலம் பாதித்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், செவிலியர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், நடிகை தீபிகா படுகோனே சினிமாவை தாண்டியும் இத்தனை பேருக்கு உதவி செய்து வருகிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்வதோடு தீபிகாவை பாராட்டியும் வருகின்றனர்.