அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ் அடுத்தடுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். மறுபிறம் ஓபிஎஸ் தரப்பு தனது அடுத்த மூவ்வில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இபிஎஸ் அணியில் இணைந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் தற்போது ஓபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார்.இபிஎஸ் அருகில் போதிய முக்கியத்துவம் தரவில்லை என்பதால் மைத்ரேயன் உட்பட சுமார் ஆயிரம் பேர் ஓபிஎஸ் அணிக்கு தாவி உள்ளனர். இன்னும் பலர் இபிஎஸ் அணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இணைப்பு நிகழ்ச்சிக்குப் பின் பேசிய மைத்ரேயன்,அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுக இயக்கத்தை வழிநடத்தும் திறன் ஓபிஎஸ் மட்டும்தான் என தெரிவித்துள்ளார்.