மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவ சேனா என அறியப்பட்டாலும் சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டேதலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் இரண்டு அணிகளும் சின்னத்தை கோரி விண்ணப்பித்திருப்பதால் தற்காலிக உத்தரவாக இரு அணிகளும் சிவசேனாவின் பெயரையும் கட்சியின் வில்லம்பு சின்னத்தையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.அதனால் தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளும் வேறு பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.