Categories
மாநில செய்திகள்

“நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்” திமுகவின் இலக்கு இதுதான்…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சென்னையில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அவர் பேசியதாவது, பிரம்ம குமாரிகள் ராக்கி கட்ட வந்தால் அவர்களை உடனே வர சொல்லுங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். அதேபோன்றுதான் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரம்ம குமாரிகள் ராக்கி கட்ட வந்தால் உடனே வர சொல்லுங்கள் என்கிறார். அவர்களின் ஒட்டுமொத்தமான எண்ணம் ஒரு அமைதியான மனிதம் வளர்ந்து எங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதுதான்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார். மன அழுத்தம் இல்லாத ஒரு பூமியை வடிவமைக்க வேண்டும் என்றால் அதற்கு தியானம் என்பது மிக அவசியமான ஒன்று. நாங்களும் கல்வி நிலையங்களில் மகிழ்ச்சியான சூழல் நிலவ வேண்டும் என்பதற்காக அதற்கு தகுந்தார் போல் பாடத்திட்டங்களை வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். நமக்கு அடக்கப்படாத மனம் தான் நண்பனாக இருக்க முடியும். அடக்கப்படாத மனம் என்பது எப்போதுமே நமக்கு விரோதிகள் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தில் கூட இதைத்தான் சொல்கிறார். நாடே சமத்துவபுரமாக மாறி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு என்று முதல்வர் கூறியிருக்கிறார் என்றார்.

Categories

Tech |