Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சி அமைத்தால்?…. நீங்க இலவசமா அங்க போயிட்டு வரலாம்…. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி….!!!!

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் ராமபக்தா்கள் அயோத்திக்கு சென்று வரும் செலவை அரசே முழுமையாக ஏற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தாா்.

பா.ஜ.க ஆட்சி நடந்துவரும் குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் தீவிரமாக களமிறங்கி இருக்கும் ஆம் ஆத்மி, பல தரப்பினரையும் கவரும் விதமாக வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. இதற்கிடையில் கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறாா். இந்த நிலையில் இருநாள் பயணமாக நேற்று குஜராத்துக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தஹோத்தில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதாவது, அயோத்தியில் ராமா் கோவில் அடுத்த வருடம் கட்டி முடிக்கப்பட்டு விடும். அங்கு போக ராம பக்தா்கள் அனைவரும் விரும்புவர்.

எனினும் பயணச்செலவு, தங்குமிடம், உணவு என அனைத்துக்கும் அதிக செலவிட வேண்டியது இருக்கும். அதுவும் குடும்பத்துடன் சென்றால் செலவு பன்மடங்கு அதிகரிக்கும். குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்திலுள்ள ராம பக்தா்கள் அனைவரும் இலவசமாக அயோத்தி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவா். தில்லியிலிருந்து ஏற்கெனவே பக்தா்கள் அயோத்திக்கு இலவசமாக சென்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் கெஜ்ரிவால் தலையில் குல்லா அணிந்த படத்தை வெளியிட்டு, அவா் ஹிந்துக்களுக்கு எதிரானவா் என்ற பேனா்கள் அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோதரா ஆகிய நகரங்களில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமபக்தா்கள் அயோத்திக்கு இலவசமாக சென்று வரலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளாா். குஜராத் மாநிலத்தில் ஏற்கனவே இலவச மின்சாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, பசுக்கள் பராமரிப்புக்காக தினசரி பசு ஒன்றுக்கு ரூபாய்.40, பால் சுரப்பு நின்ற பசுக்களைப் பராமரிக்க மாவட்டம் தோறும் காப்பகங்கள் அமைக்கப்படும். அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியதிட்டம் அமலாக்கம் என்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை கெஜ்ரிவால் அளித்துள்ளாா்.

Categories

Tech |