Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருகிறேன்” ரூ.16 லட்சம் அபேஸ் செய்த தம்பதி…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் குறிச்சி கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாதையனுக்கு ஆத்தூரை சேர்ந்த சசிகுமார்-சாந்தலட்சுமி தம்பதியினருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிகுமார் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் நான் ஏற்கனவே 40 பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்தேன். உங்களது மகள்களுக்கு ஒரு வாரத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி 20 லட்ச ரூபாயை கேட்டுள்ளார்.

இதனை அடுத்து வேலை கிடைக்கும் என நம்பி பேரம் பேசி மாதையன் ஒருவருக்கு 8 லட்ச ரூபாய் வீதம் இரண்டு மகள்களுக்கும் வேலை கிடைக்க கடந்த 2017-ஆம் ஆண்டு 16 லட்ச ரூபாயை சசிகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஏமாற்றி விட்டார். இதுகுறித்து மாதகன் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சசிகுமார்-சாந்தலட்சுமி தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |