Categories
தேசிய செய்திகள்

சிவசேனை கட்சியின் பெயர் சின்னம் முடக்கம்… காரணம் என்ன…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவும் சிவ சேனை கட்சிக்கு உரிமைகோரியுள்ள நிலையில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவை தொகுதிக்கு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கு இரு தரப்பும் அவர்களின் கட்சிக்கு புதிய பெயரை தேர்வு செய்ய வேண்டும் அதற்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 10 ஆம் தேதி பிற்பகல் ஒரு மணிக்குள் தாங்கள் விரும்பும் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவரங்களை இரண்டு அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளது.

இந்த நிலையில் பிரச்சனைக்கு இறுதி தீர்வு காணும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடரும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாஜக ஆதரவுடன் சிவசேனை  அதிருப்தி தலைவர் எக்நாத் ஷிண்டே முதல்வராகியுள்ளார். அதனை தொடர்ந்து சிவசேனை கட்சிக்கு இருதரப்பும் உரிமை கோரிய நிலையில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்திருக்கிறது தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அநீதி என உத்தரவு தாக்கரே தரப்பில் கண்டனம் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |