விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாண்டுரங்கன் அலங்காரத்தில் ஆனந்த வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
இதே போல் அரசமங்கலம் வரதராஜ பெருமாள், கோலியனூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.