சேலம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் சௌந்தரராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முன்னதாக பெருமாளுக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தாமரைப் பல்லக்கில் பெரிய ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏரியின் இருபுறமும் நின்று மலர் தூவி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.