Categories
தேசிய செய்திகள்

BREAKING : கட்டியணைத்து வரவேற்ற மோடி- ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு ….!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடி ,  ட்ரம்ப்  இருவரும் புறப்பட்டு 22 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக மொடீரா கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர்.

இரு நாட்டு தலைவர்கள் செல்லும் வழிநெடுகிலும் லட்சக்கணக்காக மக்கள் வரவேற்பை ஏற்கின்றனர்.இதையடுத்து  மொடீரா அரங்கில் நடைபெறும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மொடீரா கிரிக்கெட் அரங்கத்தை திறந்து மொடீரா அரங்கத்தில் நடைபெறும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் தனி விமானம் இந்தியா வந்தடைந்ததை தொடர்ந்து அவரை இந்திய பிரதமர் மோடி கைகுலுக்கி , கட்டியணைத்து வரவேற்றார்.

Categories

Tech |