Categories
தேசிய செய்திகள்

“குழந்தை திருமணங்களில் மோசமான மாநிலங்கள்” மத்திய அரசின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வாளர் இணைந்து மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். இந்த கணக்கெடுப்பானது சுமார் 80 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் திருமண வயது ஆவதற்கு முன்பாகவே சிறுமிகளுக்கு அதிக அளவில் திருமணம் நடப்பதாக தெரியவந்துள்ளது.

அதன்படி திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே 5.8% பேருக்கு திருமணம் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பாகவே 1.9% பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலத்தில் பெண் குழந்தைகளின் திருமணம் என்பது 0.0 சதவீதமாகவும், ஜார்கண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கிறது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் திருமண வயதை அடைவதற்கு முன்பாகவே பல பெண்களுக்கு திருமணம் ஆவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 21 வயது ஆவதற்கு முன்பாக 29.5% பெண்களுக்கு திருமணம் ஆவதாக கூறப்படும் நிலையில், மேற்கு வங்கத்தில் 54.9% ஆகவும், ஜார்கண்டில் 54.6 சதவீதமாகவும் இருக்கிறது. தற்போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆய்வு பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது என சமூக ஆர்வலர்கள்  வேதனை தெரிவிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் தான் குற்ற சம்பவங்களும் அதிக அளவில் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் ஏற்கனவே கூறியுள்ளது.

இந்த மாநிலத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பில்லி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகளால் 15 பேர் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் கூட இந்த மாநிலத்தில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த நபர் அந்த சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்ததில் பரிதாபமாக அந்த சிறுமி உயிரிழந்தார். இதேபோன்று 14 வயது நிரம்பிய ஒரு பழங்குடியின மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தூக்கிலிடப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |