Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா…! அப்பா இல்லாத இடத்தில் நீங்கள்தான்…. உருக்கமாக பேசிய கனிமொழி….!!!

சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக் குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். திமுக துணைப் பொதுச் செயலாளராக திமுக எம்.பி. மு.க.கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ். பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் தேர்வாகி இருக்கிறார். மேலும், தணிக்கை குழு உறுப்பினர்களாக பிச்சாண்டி, முகமது சகி, சரவணன், வேலுச்சாமி ஆகியோர் தேர்வாகி இருக்கின்றனர்.

திமுகவின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கனிமொழி, பொதுக்குழு கூட்டத்தில் உருக்கமான உரை ஆற்றியிருக்கிறார். முதல்வரை எப்போதும் தலைவர் அழைக்கும் கனிமொழி, இன்று மேடையிலேயே அண்ணா என்று அழைத்தார். “அப்பா இல்லாத இடத்தில் உங்களைதான் வைத்து பார்க்கிறேன். அனைத்திலும் உங்கள் பின்னால் அணிவகுக்க தயாராக இருக்கிறேன்” என்று உருக்கமாக பேசினார் கனிமொழி கருணாநிதி.

Categories

Tech |