தமிழக முதல்வர் பதிவு செய்யப்படாத விடுதிகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கி வருகின்றோம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் காவல் மருத்துவமனை வளாகத்தில் “நிற்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிடம்” சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகையான சாய்பல்லவி கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்பொழுது அவர் கூறியதாவது, ” சிறுவயதில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இன்னொருவரிடம் கூறலாம் என்பதை மிகப் பெரிய ஒரு வரமாக பார்க்கப்படுகின்றது. முன்பெல்லாம் தங்களுக்கு நிகழ்ந்த பிரச்சனையை யாரிடமும் தெரிவிக்க இயலாமல் மனவேதனைக்கு உள்ளாகும் குழந்தைகளே அதிகமாக இருந்த நிலையில் தற்போது ஒரே எண்ணை தட்டினால் போதும் தங்களது மன வேதனைகளை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அவ்வளவு எளிதல்ல.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் எனக்கு இந்த திட்டம் தெரிய வந்துள்ளது. இது இன்னும் நிறைய பேருக்கு தெரிய வேண்டும் இதன் மூலம் பல நபர்கள் நிச்சயம் பயன்பெறுவார்கள் அதிலும் நாள் ஒன்றுக்கு 500 அழைப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது, ” நிற்பயா திட்டத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அது தற்போது சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது. பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு தமிழகம் இருப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.
இதற்காக சமூக நலத்துறை இடம் காவல்துறை பங்கு முக்கியமாக இருக்கின்றது. 108 உதவி எண் பெண்களுக்காக சமூக நலத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண் காவலர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் உடனடியாக அந்த வாகனம் அந்த இடத்திற்கு சென்று விடும். அதுபோல பல திட்டங்கள் பெண்களுக்காக செயல்பட்டு வருகின்றது. ஒரு குடும்பம் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் பிள்ளைகளும் சரியாக இருப்பார்கள். இந்த திட்டத்தின் மூலம் பல நபர்கள் பயன் பெற்று இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.
இது குறிப்பாக 181 அழைப்பு நாள் ஒன்று, 500 அழைப்புகள் வருகின்றது. அதில் குறிப்பாக தமிழக முழுவதும் இந்த அழைப்பினை ஏற்று உடனடியாக தீர்வு காண்பதை பார்க்க முடிகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது, “ஒரு ஆண்டுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் சென்டர் மூலம் 500 பேருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதில் 134 பேருக்கு பாசிட்டிவ்வாக கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது. ஒரு வீட்டிற்கு சென்று கவுன்சிலிங் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து வருகின்றோம். அதற்கான பயிற்சி தற்போது நடைபெற்று வருகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், ” பள்ளிகள் நடத்தி வரக்கூடிய விடுதிகள், அமைப்புகள் நடத்தும் விடுதிகள் மற்றும் மகளிர் தங்கும் விடுதிகள் என அனைத்தும் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பதிவு செய்யப்படாமல் இருந்தால் முதல் முறை நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆலோசனை மையத்திற்கு பெண்களிடமிருந்து வரும் அழைப்புகளின் மூலம் குழந்தை திருமணங்கள் தடுப்பது உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படுவதாகவும்”
அவர் கூறியுள்ளார்.