Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கை மூட போறீங்களா…? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…!!!!!

பொதுவாக சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக செலவு செய்து விடாமல் அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்காக நாம் சேமித்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுகின்றோம். அதில் ஒரு சிலர் ஒரு சேமிப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கின்றார்கள் மற்ற சிலர் பல்வேறு வகைகளில் சலுகையை பெறும் நோக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வங்கிகளின் கணக்கு வைத்திருக்கின்றார்கள். இன்று ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பது மிக சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஒரு வங்கி செயல்படாமல் போகும் பட்சத்தில் மற்ற வங்கிகளின் பலனை நாம் பெற்றுக் கொள்ள முடிகிறது. அதாவது நீங்கள் தொடங்கி இருக்கும் அனைத்து சேமிப்பு கணக்குகளையும் சரியாக பராமரிக்க இயலாத நேரத்தில் குறிப்பிட்ட வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கிறது.

அவ்வாறு வங்கிகள் அபராதம் விதிக்கின்ற காரணத்தினால் சில மக்கள் அந்த சேமிப்பு கணக்குகளை உடனடியாக மூடி விடுகின்றார்கள். ஆனால் சேமிப்பு கணக்கை மூடுவதற்கு முன்னால் எந்தெந்த விஷயங்களை எல்லாம் நாம் கவனிக்க வேண்டும் என்பது பல பேருக்கு தெரிவதில்லை. முதலில் எந்த வங்கியில் உள்ள கணக்கை மூட விரும்புகின்றீர்களோ அந்த கணக்கில் உள்ள இருப்பை சரிபார்த்து கிட்டத்தட்ட இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான ஸ்டேட்மெண்டை டவுன்லோட் செய்து வைத்திருக்க வேண்டும். இது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் உதவிகரமாக இருக்கிறது.

மேலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கும் இந்த ஸ்டேட்மெண்ட் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களது சேமிப்பு கணக்கில் முறையாக பணத்தை பராமரிக்காததால் நெகட்டிவ் பேலன்ஸ் பிரச்சினை ஏற்படுகிறது அப்படி உங்கள் சேமிப்பு கணக்கில் உள்ள தொகையானது நெகட்டிவாக இருந்தால் கணக்கை மூட குறிப்பிட்ட வங்கி அனுமதி அளிப்பதில்லை. மேலும் நெகட்டிவ் பேலன்ஸ் இருந்தால் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருக்கிறது அதனால் சர்வேஸ் சார்ஜ் போன்றவற்றை செலுத்தி அதன் பின் கணக்கை மூட வேண்டும். நீங்கள் மூட விரும்பும் சேமிப்பு கணக்கின் மூலம் ஏதேனும் பில்கள் மற்றும் மாதாந்திர சந்தா போன்ற emiகள் எதுவும் இருந்தால் அதனை ரத்து செய்ய வேண்டும்.

இதனை அடுத்து அதை ரத்து செய்யாமல் சேமிப்பு கணக்கை மூடுவதனால் உங்களுக்கு வங்கிகளில் இருந்து கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் சேமிப்பு கணக்கை மூடுவதற்கு பல வங்கிகளும் கணக்கு தாரர்களிடமிருந்து குறிப்பிட்ட வங்கி தொகையை வசூலிக்கிறது. இந்த தொகை யாரிடம் வசூலிக்கப்படும் என்றால் சேமிப்பு கணக்கை தொடங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே கணக்கை மூடுபவர்களிடமிருந்து மட்டும்தான் இந்த தொகை வசூலிக்கப்படுகிறது. அதனால் சேமிப்பு கணக்கே தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளேயே அந்த கணக்கை மூடுவதை தவிர்ப்பது நல்லதாகும் என கூறப்படுகிறது.

Categories

Tech |