புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவார் மற்றும் பயணிப்பொறுக்கும் முதன்முறையாக ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமல்லாமல் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனம் ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு இது வயது வரை பழகுணர் மற்றும் ஓட்டுநர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வளர்க்கும் தொடரப்படும் என அரசு அறிவித்துள்ளது.