மர்மமான முறையில் மூதாட்டி இறந்த கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகமரை பரிசல் துறை காவிரி கரையோர பகுதியில் மூதாட்டியின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி ஏரியூர் பகுதியில் வசிக்கும் பாலமுருகனின் தாய் ருக்மணி(65) என்பது தெரியவந்தது.
கடந்த இரண்டு வருடங்களாக ருக்மணி மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் காணாமல் போன ருக்மணி காவிரி ஆற்றங்கரை ஓரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. எனவே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றனரா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.