Categories
மாநில செய்திகள்

“அதிமுகவை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்”…. பாஜகவை கடுப்பேத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள் திமுக என்னும் கல்கோட்டை மீது கல் வீசினால் அது செய்தமடையாது மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது புது பிரச்சினை எதுவும் உருவாகி விடக்கூடாது என்ற கவலையுடன் கண் விழிக்கிறேன். இந்த கவலையை கழக நிர்வாகிகள் எனக்கு அளிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

அதனைத் தொடர்ந்து திமுகவின் திராவிட மாடல் ஆட்சி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே தமிழகத்தில் இனி நிரந்தரமாக ஆளப்போவது திமுகவை, இதனை உறுதி செய்யும் விதத்தில் கழக நிர்வாகிகள் தொடர்ந்து செயலாற்ற வேண்டும். கட்சியின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் கழக நிர்வாகிகளின் ஒவ்வொரு செயல்பாடும் இருக்க வேண்டும். தங்களது அனைத்து செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும் என்பதையும் கட்சி நிர்வாகிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மொத்தத்தில் கட்சிக்கும் தங்களுக்கும் பெருமை தேடி தரும் விதத்தில் கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை இருக்க வேண்டும். இதனையடுத்து திமுகவை எதிர்த்து என்பதை தவிர அதிமுகவுக்கு வேற எந்த கொள்கையும் கிடையாது. நான்கு பிரிவுகளாக பிரிந்தும், சரிந்தும் கிடக்கும் அதிமுகவுக்கு எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ள எந்த பெருமையும் இல்லை. எனவே நம்மை அவர்கள் அவமதிக்க பார்ப்பார்கள் அதற்கு நாம் துளி கூட இடம் கொடுக்கக் கூடாது. அதிமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குளிர்காய நினைக்கும் பாஜக எதிர்வரும் 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றி பெற எதையும் செய்ய தயாராக உள்ளது. மதம் ஆன்மிக உணர்வை மக்கள் மனதில் தூண்டிவிட்டு தமிழகத்தில் கால் பதிக்க பாஜக துடித்துக் கொண்டு இருக்கிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |