Categories
மாநில செய்திகள்

“ஓட்டுக்கு 2000 கொடுத்தால் வாங்குங்க”….. அரசியலில் சர்ச்சை கிளப்பிய பாஜக தலைவர்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு ஏழை, எளியவருக்கு பாஜக சிறுபான்மையினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கையா கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய, அவர் நமது தலைவராக யார் வரவேண்டும் என்பதை நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் தற்போதைய திமுக ஆட்சியில் அதிகமாகி உள்ளது. இதனால் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு அங்கு கொலைகள் குறைந்துள்ளது. அங்கு கொலை செய்பவர்களுக்கு உடனே தண்டனை வழங்கப்படுகிறது.

ஆனால் தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் விசாரணை கைதிகளின் மரணம் அதிகரித்துள்ளது. லாக்‌ அப் மரணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிமுகவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் முதல்வராக இருந்தனர். ஆனால் திமுகவில் கலைஞர கருணாநிதி, மு.க ஸ்டாலின், உதயநிதி என குடும்பக் கட்சி நடக்கிறது. அதிமுகவை விட 100 மடங்கு சிறந்த கட்சி பாஜக. இங்கு யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் .ஆனால் திமுகவில் கருணாநிதி மகனாக இருந்தால் மட்டுமே முதல்வராக முடியும். அதனை தொடர்ந்து ஓட்டுக்கு ரூ.2000 காசு கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாங்கி விட்டு காசு கொடுக்காதவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள். பிரதமர் நரேந்திர மோடி தரைக்கடை வைத்திருப்பவர்களுக்கு கடன், கல்வி கடன் போன்ற கடன் வழங்கி வருகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் சமயத்தில் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டிய அரசியல் கட்சியின் தலைவரை பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |