Categories
மாநில செய்திகள்

விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வில் தில்லு முல்லு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய் துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2008‌ இன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருவாய்துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2018 கிராம நிர்வாக அதிகாரி இடமாறுதல் கலந்தாய்வு A பிரிவு மற்றும் B பிரிவு என நடைபெறும். ஆனால் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு A மற்றும் B என 2 பிரிவுகளையும் சேர்த்து பொதுவான கலந்தாய்வு என மூன்றாவது வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது அரசாணைக்கு எதிரானது. எனவே பழைய முறைப்படி வருவாய் துறை அரசாணை எண்:515 நாள் 25.8.2008 படி இடம் மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கினை நீதிபதி முடித்து வைத்தார்.

Categories

Tech |