கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது.
இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய அமைப்புகள் கோவை காவல் ஆணையரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசும் போது, சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக காவல்துறையின் விசாரணையும், நடவடிக்கையும் போய்க்கொண்டிருக்கிறது. இப்போ அந்த வழக்கு NIA போயிருக்கு. அதில் கைது செய்யப்பட்ட சில பேர் அப்பாவிகள் இருப்பதாக அவர்களின் குடும்பத்தாரும், நாங்களும் ஒரு உண்மை அறியும் விசாரணை குழுவை போட்டு விசாரணை நடத்தியதில் அடிப்படையில், ஒருத்தர் கார் வியாபாரி தல்ஹா என்கிறவர்…
கார் வியாபாரமாக தான் அதை கொடுத்திருக்கிறாரே ஒழிய, எந்த காரண காரியங்களோடும் அந்த விஷயத்தில் ஈடுபடாததால், அது போன்று அப்பாவிகள் பாதிக்கப்பட்ட விடக்கூடாது என்பதற்காக… உங்களின் விசாரணை நியாயமான அடிப்படையில் இருக்க வேண்டும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று சொன்னோம்.
அதேபோன்று பத்திரிக்கை நண்பர்களுக்கு நாங்கள் சொல்வது என்னவென்றால்… எங்களது பத்திரிக்கை அறிக்கையிலும் நாங்கள் அதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எல்லா மதத்திலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள். உலகத்தில் மதத்தை நம்பாதவர்களும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தவறு செய்யும் நேரத்தில், அந்த மதத்தை தொடர்பு படுத்தி நீங்கள் பார்ப்பது, செய்தி போடுவது, அவர்களின் கலாச்சாரத்தை பாதிப்பது போன்று செய்தி போடுவது இல்லை.
ஆனால் இஸ்லாமியரின் பெயரில் யாராவது தவறு செய்தால், இஸ்லாமிய மதத்துடன் தொடர்புபடுத்தி இஸ்லாமிய மக்களுடைய கலாச்சாரங்களுடன் தொடர்புபடுத்தி, பத்திரிக்கை செய்திகளும் திட்டமிட்டு பரப்பக்கூடிய விஷயங்கள் ஒட்டுமொத்த பொது நீரோட்டத்தில் இஸ்லாமிய மக்களை விளக்குவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இதுவும் பத்திரிக்கையாளர்கள் கவனமுடன் சிந்தித்து, நாங்கள் மன வேதனையோடு சொல்கிறோம், அது போன்ற பதிவுகளை நீங்கள் தவிர்த்திடுங்கள் என வேதனையோடு தெரிவித்தனர்.