Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்த திட்டத்திலும் பிரதமர் மோடி படமே இல்லை”…. மிகுந்த வருத்தத்தை தெரிவித்த மத்திய இணை அமைச்சர்….!!!!

தர்மபுரியில் பாஜக கூட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பாவர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்கள் நிலையில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தினேன்‌. நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு ரூ.58 கோடி வழங்கி உள்ளது. அதனை தொடர்ந்து கோவிட் பெருந்தொற்று காலத்தில் நிவாரண பணிகளுக்காக தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒரு 1,28,00,00 நிதி ஒதுக்கியது. சுகாதாரத் துறையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டம் தொடர்பான அடையாள அட்டைகள் ஆறு லட்சம் பேருக்கு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு தேசிய சுகாதார திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.3226 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் மத்திய‌, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. ஆனால் மத்திய அரசு நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் தமிழக அரசு வெளியிடுவதில்லை. சுகாதார திட்டங்கள் பொதுமக்களுக்கு இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்படும். விளம்பரங்களில் தமிழகத்திற்கு 24 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆனால் ஒரு திட்டத்தில் கூட பிரதமர் படமும், மத்திய அரசு சின்னங்களும் வெளியிடவில்லை. அதனைப் போல தர்மபுரி மாவட்டத்திற்கு இந்த விழிப்புணர்வு பணிக்காக ரூ.68 லட்சம் ஒதுக்கப்பட்டது. இங்கு வந்து பார்த்தாலும் அந்த விழிப்புணர் விளம்பரங்களில் மத்திய அரசு நிதி என்றும் குறிப்பிடவில்லை,‌பாரதபிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வகையில் அலுவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிஎஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலமாக நடைபெற்று வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவேறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |