பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களை நமது தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு அரசு செய்யும் அநீதி. மேலும் நமது தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இவர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேலும் அவர்கள் பிற வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் ஏமாற்றியது போல இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் அவர்களை ஏமாற்றுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான பகுதி நேர தகுதி பெற்ற அனுபவம் பெற்ற விரிவுரையாளர்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தனர். ஆனால் அவர்களுக்கு நிரந்தர பணி வழங்காமல் புதிய ஆசிரியர் நியமன ஆணையத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப் போவதாக அரசு சொல்வது இத்தனை ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.