2007 ஆம் வருடம் வெளியான கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன் பின் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற பல்வேறு படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது நிவின்பாலின் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகின்றார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு பற்றி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது அதன்படி டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 11ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த படம் இதுவரை பெயரிடாமல் இருந்து வருவதனால் படத்தின் தலைப்பு மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏழு கடல் ஏழுமலை என பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.