Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்வு”…. பயணிகள் அவதி….!!!!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது.

பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டது. பின்னர் மீண்டும் பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது பத்து ரூபாய் உயர்த்தப்பட்டு ரூபாய் 20-க்கு விற்கப்படுகின்றது. இந்த டிக்கெட்டை எடுத்தவர்கள் பிளாட்பாரங்களில் இரண்டு மணி நேரம் இருக்கலாம். இந்த கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் ஏழைகள் அதிக சிரமத்திற்கு ஆள ஆவார்கள். ஆகையால் ரயில்வே துறை இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |