பிரபல நாட்டில் ஒரு பெண் 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய அமெரிக்காவில் உள்ள கோங்கோ பகுதியில் பிரான்சீன் ஜிசிலி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது முதல் கணவர் ரெமி முருலா மற்றும் 2-வது கணவர் ஆல்பரட் ஜார்லேஸ் என்ற இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து ஜிசிலி கூறியதாவது. நான் 6 ஆண்டுகளுக்கு முன்பு ரெமியை திருமணம் செய்தேன். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெமி என்னை விட்டு பிரிந்து எங்கேயோ சென்றுவிட்டார்.
இதனையடுத்து நான் ஆல்பிர்ட் ஜார்லேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் ரெமி வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் ஏன் 2-வது திருமணம் செய்தாய் என என்னிடம் சண்டை போட்டு இருக்கிறார். பின்னர் 2 கணவர்களுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ அவர் முடிவெடுத்த நிலையில் தற்போது அப்படியே வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.