தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
அந்தவகையில் அக்டோபர் 24ம் தேதி வர இருக்கும் தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் நாகர்கோவில் – பெங்களூரு இடையே சிறப்பு ரயிலை கூடுதலாக இயக்க உள்ளது. இந்த ரயிலானது அக் .25ம் தேதி நாகர்கோயிலில் இருந்து பெங்களூருக்கும், அக்.26ம் தேதி மறுமார்க்கமாக காலை 10.15 மணிக்கு கிளம்பி நள்ளிரவு 12.20 மணிக்கு நாகர்கோயிலை வந்து சேருகிறது. இந்த ரயிலானது சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களின் வழியாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.