Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டீக்கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. சேலத்தில் கோர விபத்து….!!!

தனியார் பேருந்து டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓமலூரில் இருந்து கோட்டகவுண்டம்பட்டி சர்வீஸ் சாலையின் குறுக்கே லாரி ஒன்று சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் சாலையோரம் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீதும் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் சண்முகம்(50), அவரது மனைவி சுலக்சனா, மகன் லோகேஷ்(12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |