நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லையாம். மீண்டும் சேர்ந்து வாழ அவர்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை என்று போடப்படுகிறது.
தங்களுடைய மகன்களுக்காக அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழ மாட்டோம் என்று கூறுகிறார்களாம். மகன்களுக்காக நேரம் ஒதுக்குவது, நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்வது என்று அட்ஜஸ்ட் செய்ய இருவரும் தயாராக உள்ளார்களாம். ஆனால் மீண்டும் வாழும் பேச்சுக்கே இடம் இல்லையாம். தனியாக வாழும் வாழ்க்கை அவர்களுக்கு பிடித்து போய் விட்டதாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.