Categories
தேசிய செய்திகள்

5G அப்டேட்… இப்படியும் ஏமாற்றலாம்…. யாரும் இத நம்பாதீங்க…… Alert மக்களே…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசு பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகளை பயன்படுத்தி மக்களை சில கும்பல் ஏமாற்ற தான் செய்கிறது. இதனிடையே நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பலரும் 5g அப்டேட் செய்து வருகிறார்கள்.

இதனைப் பயன்படுத்திக் கொண்டே சில மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதாவது உங்கள் சிம் கார்டை 4ஜி இல் இருந்து 5ஜிக்கு அப்டேட் செய்து தருவதாக கூறி நூதன பனகொள்ளை நடந்து வருவதால் உஷாராக இருக்கும்படி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய அறிவிப்பில், உங்கள் சிம் கார்டை 5ஜிக்கு அப்டேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று உங்கள் போனுக்கு மெசேஜ் ஏதும் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |