விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நேற்று தொடங்கியது. இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று மாலை பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் போட்டியாளர்களில் ஒருவராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டார். அப்போது அவர் தொகுப்பாளர் கமலிடம்,நான் மிகப்பெரிய கனவுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன், ஆனால் அது ஒரு வருடத்திற்குள் கலைந்து விட்டது . தற்போது என் மகன் தான் எனக்கு எல்லாம். அவன் படிப்பிற்காக பிக் பாஸ் வந்துள்ளேன். சப்போர்ட் பண்ணுங்க என்று கண்கலங்கியபடி பேசினார். உடனே கமல் அவரை தேற்றினார்.