Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே(அக்…10) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு  அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள்.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ப்ரீ கேஜி, எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் பாலவாடிகா என்ற பெயரில் நடப்பு ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மூன்று முதல் நான்கு வயது வரை,இரண்டாம் பிரிவில் மூன்று முதல் ஐந்து வயது வரை மற்றும் மூன்றாம் பிரிவில் ஆறு வயது வரை மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை chennaiiit.kvs.ac.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் இதற்கான விண்ணப்ப பதிவு இன்று  பகல் ஒரு மணியுடன் முடிவடைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |